• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

December 22, 2018 தண்டோரா குழு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த முதல் படம் பொல்லாதவன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பின் இருவரும்’ஆடுகளம்’ படத்தில் மீண்டும் இணைந்தனர். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்று தேசிய விருதையும் பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த வடசென்னை படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது இக்கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

கலைப்புலி தானு தயாரிக்கும் இப்படத்திற்கு அசுரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் சூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க