• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷுடன் நான்காவது முறையாக இணையும் ஜீவி பிரகாஷ்

January 21, 2019 தண்டோரா குழு

பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘மாரி 2′ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு தனுஷின் அசுரன் படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.

வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைபுலி தாணு தயாரிக்கும் இப்படத்தை வெற்றி மாறன் இயக்கவுள்ளார். இப்படம் வெக்கை’ என்ற நாவலின் தழுவலாம் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆடுகளம், பொல்லாதவன், மயக்கம் என்ன படத்தை தொடர்ந்து ஜீவி பிரகாஷ் – தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக அரசுரன் படத்திற்காக இணைந்துள்ளது.
மேலும், இப்படத்தின் சூட்டிங் ஜனவரி 26ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க