August 18, 2017
தண்டோரா குழு
இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் படம் மெர்சல். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாய் நடக்கவுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய் ரசிகர்களுக்காக ‘மெர்சல் எமோஜி’ வெளியிடப்பட்டுள்ளது. அந்த எமொஜி மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் ஸ்டில்லை வைத்து வடிவமைத்துள்ளார்கள்.
தமிழ்ப் படம் ஒன்றுக்கு ட்விட்டரில் எமோஜி வந்திருப்பது இதுவே முதன்முறையாகும் இது மெர்சல் படத்திற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் ஆகும். இனி ட்விட்டரில் மெர்சல் ட்வீட் போடுபவர்கள் எமோஜி வைத்தும் மெர்சல் செய்யலாம். இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளார்கள்.