• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டுவிட்டரில் இந்திய ட்ரெண்டில் சண்டையிட்ட விஜய் – அஜித் ரசிகர்கள்!

December 26, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் என்றால் தல அஜீத்தும் தளபதியும் விஜயும் தான். இவர்களது படம் மட்டுமல்ல பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதைபோல் இவர்களது படத்தின் பர்ஸ்ட் போஸ்ட் வந்தால் அது இந்திய அளவில் ட்ரெண்டாகும் காரணம் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அஜித் , விஜய் இருவருக்குமே ரசிகர்கள் அதிகம்.

விஜய் மற்றும் அஜித் படங்கள் தொடர்பான அறிவிப்புகள், டீசர், ட்ரெய்லர் போன்றவற்றை ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டாக்குவதில் அவர்களது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர்கள் விஜயும் அஜித்தும் திரை துறையையும் தாண்டி சிறந்த நண்பர்களாக உள்ளனர். ஆனால், சில சமயங்களில் இவர்களது ரசிகர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டாக்குவதை பழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சர்கார் நேற்று டிசம்பர் 25-ம் தேதி சர்கார் படம் 50 நாட்களைக் கடந்தது. இதனால் குஷியான விஜய் ரசிகர்கள் தங்களது தலைவர் படம்தான் வசூலில் சாதனை படைத்துள்ளது என பதிவிட்டனர். அதைபோல் பதிலுக்கு அஜித் ரசிகர்கள் தங்களது தலைவரை புகழ்ந்து பதிவிட்டனர். இப்படி சாதாரனமாக துவங்கிய பதிவுகள் வார்த்தைப் போரில் இருவரையும் மாற்றி மாற்றி அசிங்கப்படுத்திக் கொண்டனர். இதனால் #தேவாங்குஅஜித் #ஆமைவிஜய் இந்த ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “இது யாருக்குமே நல்லதல்ல – ரசிகர்களுக்கு மட்டுமல்ல இரு நடிகர்களுக்கும் தான். அஜித், விஜய் இருவருமாக சேர்ந்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க