• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிவி நிகழ்ச்சி மூலம் திருமணம் செய்து கொள்வாரா நடிகர் ஆர்யா

February 19, 2018 தண்டோரா குழு

2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய “அறிந்தும் அறியாமலும்படத்தின் மூலம் தமிழ் சிநிமாவிற்கு அறிமுகமானவர் ஆரியா. அதன்பின் ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட 25க்கும் மேல்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் திருமணமாகாத நடிகர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் ஆர்யா மற்றும் விஷால்.நடிகர் விஷால் நடிகர் சங்கத்திற்க்கான கட்டிடம் கட்டிய பிறகு அதில்தான் தனது திருமணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.அவரோட நெருங்கிய நண்பனான ஆர்யாவும் விஷாலைப்போல் சங்கத்தில் தான் திருமணம் செய்துகொல்வதாக பேசிவந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று தனக்கு வேண்டிய மணப்பெண்ணை தேடுவதாகவும்,தன்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு தனது டுவிட்டர் பக்கத்தில் விடாவாக போஸ்ட் செய்திருந்தார்.ஆனால் அது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ப்ரோமோ என்றும், அந்த நிகழ்ச்சியின் பெயர் “எங்க வீட்டு  மாப்பிள்ளை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று அந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொழைக்கட்சியில் மாலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஆர்யாவுக்கு சிறந்த மணப்பெண்ணை தேடும் இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுக்கு துணையாக நடிகை சங்கீதாவும் பங்கேற்கிறாராம். பெண்கள் தனது அழகு மற்றும் திறமையின் மூலம் ஆரியாவை கவர முயசிப்பர்கள், அவர்களுள் ஒருவரை ஆர்யா தேர்வு செயது திருமணம் செய்துகொல்ல்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.

இந்த நிகழ்ச்சின் மூலம் ஆர்யாவிற்கு ஏற்ற மணப்பெண் கிடைப்பாரா? அப்படி ஆர்யா தேர்வு செய்யும் அந்த பெண்ணை ஆர்யா உண்மையிலேயே திருமணம் செய்துகொள்வாரா? என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

 

மேலும் படிக்க