• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் !

March 23, 2019 தண்டோரா குழு

முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை திரைபடமாக எடுப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில்,மறைந்த நடிகை சாவித்திரி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரது வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அந்த வரிசையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறும் திரைபடமாக எடுக்கப்படவுள்ளது. இப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கவுள்ளார் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு தலைவி என்ற டைட்டிலையும் வெளியிட்டார். ஆனால், யார் ஜெயலலிதாவாக நடிக்கப் போகிறார் என்ற தகவலை வெளியிடவில்லை. வித்யாபாலன் ஜெயலலிதாவாக நடிப்பார் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது, தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுகமான இந்தி நடிகை கங்கனா ரனாவத், நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். தமிழில் ‘தலைவி’ என்றும் இந்தியில் ‘ஜெயா’ என்றும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இன்று கங்கனா ரனாவத்தின் பிறந்த நாள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க