• Download mobile app
28 Jan 2026, WednesdayEdition - 3640
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சௌந்தர்யா – விசாகன் திருமணம் அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பங்கேற்பு

February 11, 2019 தண்டோரா குழு

சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணம் நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். சவுந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது. விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன். இவரும் விவாகரத்து பெற்றவர். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார். இரு வீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் தொடங்கின.

தனது மகள் திருமணத்தையடுத்து ரஜினி பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்களை சந்தித்து அழைப்பு விடுத்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி ராவேந்திர திருமண மண்டபத்தில் நடந்தது.

இந்நிலையில்,இன்று சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சௌந்தர்யா – விசாகன் திருமணம் நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், திரைத்துறைப் பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

மேலும் படிக்க