போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். பின் பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்த இவருக்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ‘வெல்வெட் நகரம்’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் வரலட்சுமி.சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன் இயக்கி வருகிறார்.
வரலக்ஷ்மி பத்திரிக்கையாளராக வலம் வரவுள்ளாராம். இப்படத்தில் முக்கிய வேடங்களில் அர்ஜை, ரமேஷ் திலக், ‘சூப்பர் சிங்கர்’ மாளவிகா ஆகியோர் நடிக்கின்றனர். ‘மேக்கர்ஸ் ஸ்டுடியோ’ என்ற நிறுவனம் தயாரித்து வரும் இதற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். சமீபத்தில், இதன் ஷூட்டிங் துவங்கியதாம்.
தற்போது நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கைவசம் சர்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, விமலின் ‘கன்னி ராசி’, பிரியதர்ஷினியின் ‘சக்தி’, கெளதம் கார்த்திக்கின் ‘Mr.சந்திரமௌலி’, வினய்யின் ‘அம்மாயி’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘மாரி 2’, விஜய் 62, ஜெய்யின் ‘நீயா 2’, சரத்குமாரின் ‘பாம்பன்’ என அடுத்தடுத்து படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் வில் ஸ்மித்?
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா – வேந்தர் பால் தினகரன் பட்டங்களை வழங்கினார்
இந்திய சினிமாவில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளம் தலைமுறை திரை பட கலைஞர்களை ஊக்குவிக்க ஸ்கிரீன் அகாடமி துவக்கம்
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி
கோவையில் நவீன சொகுசு வசதிகளுடன் மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் துவக்கம் !
நெல் சாகுபடியில் இலையுறை கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் ஃபெளுஜிட் எனும் பூசனக்கொல்லி மருந்து பாயர் கிராப் சயன்ஸ் நிறுவனம் அறிமுகம்