January 31, 2018
தண்டோரா குழு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கலன்று வெளியான படம் ”தானா சேர்ந்த கூட்டம்”. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்திற்கான படப்படிப்பு புத்தாண்டு அன்று துவங்கியது. இதற்கிடையில், சூர்யா மீண்டும் மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்த் உடன் இணையவுள்ளார்.
சூர்யா 37 படத்தை கே.வி ஆனந்த் இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், இப்படத்தின் படப்படிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.