சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், படத்தின் எடிட்டராக பிரசன்னா ஜி.கே. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது திடீரென பிரசன்னாவுக்குப் பதிலாக பிரவீன் கே.எல். எடிட்டராக நியமிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
எடிட்டர் பிரவீன் கே.எல் ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்பட பல படங்களை எடிட் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து பிரவீன் கே எல் தனது சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்.மேலும்,இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்