• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவின் போர்ஷனுடன் செக்க சிவந்த வானம் படப்பிடிப்பு நிறைவு

June 2, 2018 தண்டோரா குழு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.இந்தப் படத்தில் அரவிந்த் சாமி,ஜோதிகா,சிம்பு,விஜய் சேதுபதி,அதிதி ராவ்,அருண் விஜய்,ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது.இடையில்,ஸ்ட்ரைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, பின்னர் பரபரப்பாக நடைபெற்றது.

இதையடுத்து,கடந்த மாதம் முதல் வாரத்தில் அர்விந்த் சாமி தன்னுடைய போர்ஷன் நிறைவு பெற்றதாக அறிவித்தார்.பின்னர் அருண் விஜய்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ஜோதிகா என ஒவ்வொருவர் போர்ஷனாக நிறைவுப்பெற்றது.இதையடுத்து,மணிரத்னம் செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்.நேற்று சிம்புவின் போர்ஷனும் நிறைவு பெற்றுள்ளது.இந்த நிலையில், சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

மேலும் படிக்க