• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிநேகனிடம் இருந்து நிறைய விஷயம் கற்றுக்கொள்ள வேண்டும் – சதீஷ்

September 11, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் சதீஷ் இவன் யார் படத்தின் புரோமோஷனுக்காக கோவை வந்திருந்தார்.அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிக்பாஸ் சினேகன் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப்பினர்.

இதற்கு பதிலளித்த பேசிய நடிகர் சதீஷ்,

பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் தினமும் பார்ப்பேன். பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே சென்றால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்று நமக்கே தெரியாது. ஒரே வேலை நான் சென்று இருந்தால் கூட ஓவியாவை நானே திட்டி இருப்பனோ என்னவோ. ஆனால் என்னை அழைத்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன் ஏனெனில் வெளியில் இருந்து நிகழச்சியை கலாய்ப்பதற்கு நல்லா இருக்கு.

அதைபோல் சிநேகனிடம் இருந்து நிறைய விஷயம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அடி வாங்காமல் பெண்களை எப்படி கட்டிபிடிப்பது என்பது நாம்அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என ஜாலியாக கூறினார்.

மேலும் படிக்க