அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் ‘அக்னி சிறகுகள்’, ‘பாகுபலி’ பிரபாஸுடன் சாஹோ’ உள்ளிட்ட படங்களில் அருண் விஜய் நடித்து வருகிறார்.
சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அருண் விஜய் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இத்திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்