• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

க்யூட்டான உடையில் வளைகாப்பில் கலக்கிய எமி ஜாக்சன் !

August 31, 2019 தண்டோரா குழு

மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்ஸன். அதன்பின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் இறுதியாக ரஜினியுடன் இணைந்து 2.௦ படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில், எமி ஜாக்ஸன் ஜார்ஜ் பனாயோட்டா என்பரை திருமணம் செய்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்ஸன் கர்ப்ப காலத்தை புகைப்பட டைரியாக வெளியிட்டு வருகிறார். கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றம், அந்த நேரங்களில் செய்யப்படும்
உடற்பயிற்சி, சாப்பாட்டு முறை என பலவற்றை பற்றி பதிவுகள் தொடர்ந்து பதிந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை எமி ஜாக்சனுக்கு அவருடைய கணவர் ஜார்ஜ் பனாயோட்டா வளைகாப்பு நிகழ்வை நடத்தினார். அந்த விழாவின் எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வளைகாப்பு நிகழ்வு கனவு போல் இருப்பதாக தெரிவித்துள்ளார். எமி ஜாக்சன் நீல நிற உடையில் தாய்மைக்கே உடைய பூரிப்புடன் தோற்றமளித்தார். எனது ஆண் குழந்தையை நல்ல நண்பர்கள் மற்றும் சிறந்த குடும்பத்தினருடன் கொண்டாடும் அழகான பிற்பகல் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது மகன் பல அற்புதமான பெண்களைக் தன் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டசாலி பையன்…நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக தெரிவித்திருந்தார். வண்ண பலூன்கள் மற்றும் பூக்களுக்கு மத்தியில் நின்று எமி ஜாக்சன் போஸ் கொடுத்தார்.

மேலும் படிக்க