• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உருவாகி வரும் சுயரூபம் டெலிபிலிம் !

March 15, 2018 தண்டோரா குழு

ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் சுயரூபத்தை வெளிப்படுத்தும் கதையம்சத்துடன் கோவையில் சுயரூபம் என்ற டெலிபிலிம் உருவாகி வருகிறது.

வெண்ணிலா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கல்லூரி மாணவர் ஜெகதீஸ்வரன்  இயக்கவுள்ளார். இப்படத்தில் 70 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கவுள்ளனர். இதுமட்டுமின்றி பல்வேறு திரைப் பிரபலங்களும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் அறிமுக விழா சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், நடிகர் விஷ்ணுப்ரியன், முப்பரிமாணம் படத்தின் தயாரிப்பாளர் விஸ்வநாதன், கேரளா சமாஜம் தலைவர் சோமன் மேத்யூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் வெண்ணிலா கே.ரவிகுமார் கூறுகையில்,

நான்  ” ஒரு குப்பை கதை”  படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன். 68 குறும்படங்களை இயக்கியும், 7 குறும்படங்களை தயாரித்தும் உள்ளேன். சுயரூபம் படத்தை கல்லூரி மாணவர் ஜெகதீஸ்வரன்  இயக்கவுள்ளார். நாங்கள் பல கலைஞர்கள் ஒன்றிணைந்து “ நடிக்கலாம் வாங்க “ என்ற வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி உள்ளோம். அக்குழுவில் உள்ள பலரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். நிறைய இளம் கலைஞர்களும் இதில் நடிக்கவுள்ளனர். விரைவில் துவங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  கோவை,பொள்ளாச்சி,பாலக்காடு ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது.

ஒரு திரையரங்கில் இப்படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். என் திரைப்பயணத்தில் இந்த சுயரூபம் படம் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அதைபோல் இதில் நடிக்கும் கலைஞர்களுக்கும் இப்படம் ஒரு தன்னம்பிக்கையை தருவதாக அமையும். கோவை மாவட்டத்தில் குறும்படங்கள் இயக்கும் பலருக்கும் இப்படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்றார்.

 படத்தின் இயக்குநர் ஜெகதீஷ்வரன்  கூறுகையில்,

நான் இதுவரை 6 குறும்படங்களை இயக்கியுள்ளேன்.  எனது முதல் டெலிபிலிம் சுயரூபம் தான். இப்படத்திற்காக கோவையில் நாங்கள் ஆடிஷன் நடித்தினோம். அதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒரு சுயரூபம் இருக்கும்.அந்த சுயரூபத்தை வெளிச்சம் போட்டுகாட்டுவதே இப்படத்தின் கதையம்சம் என்றார்.

மேலும் படிக்க