• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கையில் ஏற்பட்ட காயத்துடன் கேரள மக்களுக்கு உதவ களமிறங்கிய நடிகை அமலா பால்

August 18, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.100ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணி போர் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை அமலாபால் சமீபத்தில் அதோ அந்த பறவை போல படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது கையில் தசை நார் கிழிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அமலாபாலும் கேரள மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ளார்.கையில் ஏற்பட்ட காயத்துடன் கேரளா மக்களுக்கு தேவையான பொருட்களுடன் களமிறங்கியுள்ளார். அமலாபாலின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

மேலும் படிக்க