கிரைம் திரில்லர்’ படம் எடுக்க இயக்குனர் மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பைனான்சியர் ரகுநந்தன் என்பவர் இயக்குனர் மிஷ்கின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,கடந்த 2015-ஆம் ஆண்டு தன் மகனை நடிக்க வைத்து படம் எடுப்பதற்காக இயக்குனர் மிஷ்கினிடம் ரூ. 1 கோடி கொடுத்ததாகவும், ஆனால் அவர் ஒப்பந்தப்படி படம் எடுக்கவில்லை என்றும், தமக்கு நியாயம் கிடைக்கும் வரை அவரது கிரைம் திரில்லர் பாணி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும் ஜனவரி 2-ம் தேதிக்குள் மனு குறித்து இயக்குனர் மிஷ்கின் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
தற்போது, இயக்குநர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து சைக்கா என்ற கிரைம் திரில்லர் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்