May 29, 2018
தண்டோரா குழு
ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில்,படம் ரிலீசாகும் அன்றே இணையதளங்களிலும் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.இந்நிலையில்,காலா படத்தை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ்ராக்கர்ஸ் அறிவித்துள்ளது.
தமிழ் படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் பைரசி இணையதளம்,காலா படத்தை வெளியாகும் நாள் அன்றே வெளியிடுவோம் என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.