கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்ஜித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.இந்த வாரம் திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு பல இடங்களில் புக்கிங் தொடங்கி விட்டனர்.ஆனால்,காவிரி விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் காலா படம் கர்நாடகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காலா திரைப்படத்தை வெளியிடக் கோரி தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அப்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவில் காலா படம் ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது என்றும்,அதனால்,இப்படத்திற்கு கர்நாடகாவில் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்றும் அதனால் வசூல் ஆகிவிடும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில்,இப்படத்திற்கு இவ்வளவு பட்ஜெட்டா என்று அனைவரும் சற்று அதிர்ந்து போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு