• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காலா டீசரில் திருநெல்வேலி தமிழில் கலக்கிய ரஜினி

March 2, 2018 tamilsamayam.com

இன்று வெளியிடப்படுவதாக இருந்த காலா திரைப்படத்தின் டீசரை, நேற்று நள்ளிரவே நடிகர் தனுஷ் வெளியிட்டதால், ரசிர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கபாலி’. மலேசிய வாழ் தமிழர்களின் வாழ்வை சித்தரிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டிருந்தது. ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக ரஜினி நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து பா.ரஞ்சித், ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். ‘காலா’ என்ற பெயரில் உருவாகி இப்படத்தை, தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

காலா திரைப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடப்படும் என்று முதலில் நடிகர் தனுஷ் அறிவித்தார். இதனையடுத்து, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவை ஒட்டி, நாளை (மார்ச் 1) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட காலா திரைப்படத்தின் டீசர், நாளை (மார்ச் 2) தேதி வெளியிடப்படும் என்று தனுஷ் டுவீட் செய்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 10.40 மணியளவில் காலா திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ், தனது வொண்டர் பார் தயாரிப்பு நிறுவனத்தின் யூடியுப் சேனலில் வெளியிட்டார். மேலும், இது குறித்த அறிவிப்பையும் டுவிட்டரில் வெளியிட்டார். டீசர் வெளியான சில நிமிடங்களிலே ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.

டீசரில் நடிகர் ரஜினிகாந்த் திருநெல்வேலி தமிழில் வசனத்தை பேசியுள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே படத்தின் திரைக்கதை நெல்லை மாவட்டத்துக்கு தொடர்புடையது என்று நடிகர் ரஜினிகாந்த தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க