கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பவர் இயக்கத்தில் வெளியான படம் ‘மாநகரம்’. இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. சாம்.சி.எஸ். இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்