• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் !

June 9, 2020 தண்டோரா குழு

இயக்குநர் கார்த்திக் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் சியான் விக்ரமின் படத்தை இயக்கவுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சியான்60′ அல்லது ‘விக்ரம்60′ எனக் கூறப்படும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும், அதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜகமே தந்திரம் படத்தையடுத்து நான் இயக்கப்போகும் அடுத்த படம் ‘சியான்60′ என அறிவிப்பதில் மகிழ்ச்சி” எனப் பதிவிட்டார். இசையமைப்பாளர் அனிருத், தனது ட்விட்டர் பக்கத்தில் “ முதல் முறையாக சியான்60-க்காக அருமையான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன், மீண்டும் ஒரு சிறப்பான தரமான சம்பவம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இரு கைகள், ஒரு துப்பாக்கி, சிறிது இரத்தம் நிறைந்த இந்த அறிமுக போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், இந்த படம் குறித்த செய்தியே தற்போதைய கோலிவுட்டின் ஹாட் செய்தியாக உள்ளது.

மேலும் படிக்க