December 10, 2018 
தண்டோரா குழு
                                இயக்குநர் சிவா இயக்கத்தில் வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் அஜித் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  
விவேக், கோவை சரளா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளார்.  மேலும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின்  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், படத்தின் பாடல் வெளியீடு எப்போது என தல ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், இன்று மாலை 7 மணிக்கு விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அட்ச்சி தூக்கு என்ற சிங்கள் பாடல் வெளியிட உள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தல ரசிகர்கள் கொண்டாடத்தில் உள்ளனர்.