• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்லி பாய் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

September 21, 2019 தண்டோரா குழு

92-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த ‘கல்லி பாய்’ படம் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2௦2௦ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, இந்த விருதுக்கான பரிந்துரைகள் தற்போது நடைபெற்து வருகிறது.

இதற்கிடையில், இந்தியா சார்பில் படத்தை பரிந்துரைப்பதற்கான கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்லி பாய், ஆர்டிக்கல் 15, கேசரி, டியர், காம்ரேட் உரி, த சர்ஜிகல் ஸ்ட்ரைக், வடசென்னை, உள்ளிட்ட 28 படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் இருந்து கல்லி பாய் திரைப்படம் 92-வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்ப அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யபட்டது. இந்த படம் சர்வதேச படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் நடித்த இப்படத்தை சோயா அக்தர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க