February 13, 2018
தண்டோரா குழு
பிரேமம் படத்தின் மூலம் மலையாள ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தமிழ் நாட்டைசேர்ந்த சாய் பல்லவி.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் படம் கரு.நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டுள்ள இப்படம் தற்போது சமூகத்தில் பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கும் பிரச்னையை கருத்தாக கொண்டு உருவாகிஉள்ளது. இதுமட்டுமின்றி இந்த படத்தில் பல காட்சிகளில் மிக தத்ரூபமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் தான் நடிப்பை வெளிப்படுத்திய சாய்பல்லவி பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளாராம்.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகா சவுர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், நேற்று இப்படத்தை பார்வையிட்ட தனி குழுவினர் எந்த ஒரு காட்சியையும் கத்தரிக்காமல் யு/ஏ சான்றிதழை வழங்கயுள்ளது.
படம் கரு இது தமிழ் மற்று தெலுங்கு மொழியில் பிப்ரவரி13 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.