• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி பயன்படுத்திய பேனாவை நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் காட்சிக்கு வைக்க வேண்டும்– விஷால்

August 13, 2018 தண்டோரா குழு

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை காட்சிக்கு வைக்க வேண்டும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.காமராஜர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு திரையுலகினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளாரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் பேசுகையில்,

புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கு கருணாநிதியின் புகழை எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் நாசர், ராதாரவி, பொன்வண்ணன் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க