• Download mobile app
24 Oct 2025, FridayEdition - 3544
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல்ஹாசன் இடத்தை பிடித்த ஜூனியர் என்.டி.ஆர்!

June 23, 2017 tamilsamayam.com

தமிழில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ளார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளன. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் உலக நாயகன் கமல்ஹாசன்!

இதே நிகழ்ச்சி தெலுங்கிலும் தயாராகிவருகிறது. மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வடிவமைப்பு என்னவென்றால், 15 பிரபலங்கள், 100 நாட்கள் நிகழ்ச்சிக்காகவே வடிவமைக்கப்பட்ட வீடு ஒன்றில் தங்கியிருக்க வேண்டும். வீட்டின் பாத் ரூம்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு சீசனுக்கும் புது வீடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வீடு செட் போடப்படுகிறது. கார்டன், நீச்சல் குளம், ஜிம் என்று மிகவும் வசதியாக வீடு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 1 அல்லது 2 படுக்கை அறை, 4 கழிவறை, குளியலறை தான் வீட்டில் இருக்கும். வீட்டில் 100 நாட்கள் தங்கி இருப்பவர்களுக்கு வெளி உலக தொடர்பு இருக்காது. டிவி, செல்போன், இன்டர்நெட், கடிகாரம், பேனா, பேப்பர் என்றும் எதுவும் வீட்டில் இருக்காது.

ஏற்கனவே மற்ற நாடுகளிலும், ஹிந்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானதால் தமிழ் மற்றும் தெலுங்கிலும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க