• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு டுவிட்டால் விஜய் ரசிகர்களுக்கும்…நடிகர் கருணாகரனுக்கும் நடந்த வார்த்தை போர் !

October 8, 2018 தண்டோரா குழு

ட்விட்டர் பதிவால் விஜய் ரசிகர்களுக்கும் கருணாகரனுக்கும் சமுக வலைத்தளத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கொலை மிரட்டல் அளவுக்கு சென்றுள்ளது.
சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாகவுள்ள ‘சர்க்கார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், நான் படத்தில் முதல்வர் இல்லை ; நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன். போன்ற பேச்சுக்கள் சமுக வலைதளங்களில் டிரண்டானது. அதைபோல் உழல்லற்ற ஆட்சி, உழலை முழுமையாக ஒழிப்பேன் என்பது போன்ற பல கருத்துகளை பேசி தமிழக அரசியல் வாதிகளை திரும்பிபார்க்க வைத்திருந்தார்.

விஜயின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. குறிப்பாக ஆளும் கட்சி தரப்பில் இருந்து நடிகர் விஜயை கடுமையாக சாடியுள்ளனர். ஆனால் நடிகர் விஜய் அந்த கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா” என்று ட்வீட் செய்திருந்தார். இந்த ட்விட் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாகியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் கருணாகரனின் ட்விட்டர் பக்கத்தில் வந்து கடுமையாக வசைப்பாடியுள்ளனர். இதற்க்கு பதிலடி தரும் வகையில் கருணாகரன் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தைத் தெரிவிக்கிறது” என்று மீண்டும் பதிவிட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனை கடுமையாகவும் மிகவும் கொச்சையாகவும், தகாத வார்த்தைகளில் திட்டியும் சமுகவளைதளங்களில் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். மேலும் அவர் நம்பரையும் சமுகவளைதளங்களில் பதிவிட்டும் உள்ளனர்.

இதையடுத்து கருணாகரனுக்கு ஆயிரக்கணக்கில் கால்களும், வாட்ஸ்அப் மெசேஜ்களும் வந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த கருணாகரன் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தை அனுகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க