• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஸ்வர்யா ராயை ஒப்பிட்டு தேர்தல் கருத்து கணிப்பு மீம்…! – விவேக் ஓபராய் சர்ச்சை டுவீட்

May 20, 2019 தண்டோரா குழு

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் விவேக் ஓபராய். தற்போது இவர் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடி வேடத்தில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதற்கிடையில், மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று மாலை கருத்து கணிப்புகள் வெளியானது. இதில், பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தும, பலரும் அதை வரவேற்றும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் விவேக் ஓபராயும் கருத்துக் கணிப்பை கிண்டலடிக்கும் வகையில் “கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை. இதுதான் வாழ்க்கை என்று முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரித்து மீம்ஸ் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த மீம்ஸில், ஐஸ்வர்யா ராய் – சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் – விவேக் ஓப்ராய் உள்ள படத்தை தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தை தேர்தல் முடிவுகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐஸ்வர்யா ராய் – சல்மான் கான் ஆகிய இருவரும் காதலிப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் ஐஸ்வர்யா ராய், விவேக் ஓப்ராயைக் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர், 2007-ம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டலடிக்கும் வகையில் விவேக் ஓபராய் இந்த மீம்ஸை பகிர்ந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க