காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0′ அண்மையில் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுமட்டுமன்றி இப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது, ‘பேட்ட’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது அவரின் கேரியரில் 166-வது படமாகும்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் – சந்தோஷ் சிவன் இணைந்து ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஸ்பைடர்’ படங்களில் பணிபுரிந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘நாற்காலி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இப்படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது