• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் ரோல் மாடல் ஜெயலலிதா தான் – நடிகை ஸ்ரீ ரெட்டி

August 20, 2018 தண்டோரா குழு

நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தம்மை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக டோலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி,

இவர் தற்போது ரெட்டி டைரி என்ற திரைப்படத்தில் நடக்கவுள்ளார்.இப்படத்தை தித்தர் ஃபிலிம் ஹவுஸ் மற்றும் ரங்கீலா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்நிலையில்,சென்னையில் செய்தியாளர்களை நடிகை ஸ்ரீ ரெட்டி சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஜெயலலிதா அம்மாவை வணங்கி நான் ஆரம்பிக்கிறேன். காரணம், என் ரோல் மாடல் ஜெயலலிதாதான். நான் அரை நிர்வாண போராட்டம் நடத்தியபோதும் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் எனக்கான நீதி கிடைக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு எனக்கான வலியை வெளிய கொண்டு வந்திருக்கிறது.ரெட்டி டைரி படத்தில் தாம் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளேன். திரைப்பட பிரபலங்கள் தம்முடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் ரெட்டி டைரி படத்தில் இடம்பெறும். ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் முறையாக அனுமதி பெறப்படும்.இனி, கிளாமர் ரோல்களில் நடிக்க மாட்டேன். பெண்களை மையப்படுத்தின கதைகளில் மட்டுமே நடிப்பேன். சென்னையில் செட்டிலாகி அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும், தம்மை ஏமாற்றிய மேலும் பலரின் விவரங்களையும் பேஸ்புக், டுவிட்டரில் தொடர்ந்து வெளியிட இருப்பதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க