• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ இசை அமைப்பாளர் யார்?

January 3, 2017 tamil.samayam.com

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் எனும் கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து கவுதம் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகியுள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ போஸ்டர்கள், டீசர் வெளியான போதிலும், இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து படக்குழுவினர் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

சமீபத்தில் ‘மறுவார்த்தை பேசாதே’ எனும் பாடல் புரோமோ வெளியானதையடுத்து, இசையமைப்பாளர் யார் என்பது அறியாமல் ரசிகர்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர். கவுதம் இயக்கிய படங்களில் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, இசைஞானி இளையராஜா போன்ற பிரபலமானவர்களின் பெயரை வெளியிட எவ்வித இடர்பாடுகள் இல்லை என்பதால் இவர்களில் யாரும் இசையமைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

ஆகையால் புது இசையமைப்பாளருடன் கவுதம் கூட்டணி அமைத்திருப்பதாகவும், அது அனிருத், ஷேன் ரோல்டன், ‘வெப்பம்’ இசையமைப்பாளர் ஜோஷ்வாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், எ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் ரகுமான் அல்லது ‘சக்கை போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கும் கவுதமின் விருப்ப நாயகன் சிம்பு போன்ற புதுமுக இசையமைப்பாளர்களும் ரசிகர்களின் சந்தேக வளையத்தில் உள்ளனர்.

இதனிடையே, பாடலாசிரியர் மதன் கார்க்கி, தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ பட இசையமைப்பாளர் பற்றி சூசகமாக தகவல் தெரிவித்திருக்கிறார். அவரது டுவீட்டின் படி, இந்தப் படத்துக்கு இயக்குனர் கவுதம் மேனனே இசையமைத்திருக்கிலாம் என்று பலர் யூகித்து வருகின்றனர்.

மேலும் படிக்க