• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை அடிச்சுருவியா பிக் பாஸ் வீட்டில் பாலாஜி – மஹத் சண்டை

August 6, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 48 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதுவரை மமதி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, நித்யா ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஷாரிக் வெளியேற்றப்பட்டார்.தற்போது 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்காக முதல் புரோமோ வெளியிடப்பட்டது. அதில்,

பாலாஜி, ஜனனி மற்றும் ரித்விகா ஆகியோர் ஒன்று சேர்ந்து பேசுகின்றனர். ரித்விகா சென்றாயன் கொஞ்சம் செலிபிஸ்ஸாக தெரிவதாக ரித்விகா கூறுகிறார்.

அதற்கு பாலாஜி இதே சென்ட்ராயன் புசியாகணும்னு நினைச்சா என்ன வேணும்னாலும் செய்வான் என கூறியுள்ளார். மேலும் யாஷிகா இந்த வாரம் நாமினேட் ஆகியிருந்தால் அடுத்த வாரம் நிச்சயம் வெளியேறி இருப்பார் எனவும் பேசுகின்றனர்.

தற்போது, இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாலாஜி பிக் பாஸ் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் எங்களை பற்றி வெளியே என்ன பேசுகிறார்கள் என்று கேட்பது முட்டாள் தனம் எனக் கூறுகிறார்.அப்போது மஹத் கோபமாக எழுந்து அது அவரவர் விருப்பம் நீங்கள் எப்படி முட்டாள் எனக் கூறுவீர்கள் என்று பாலாஜியை நோக்கி பேசுகிறார்.

அப்போது ஏன் இப்படி கத்தி பேசுறே என்ன என்னை அடிச்சுருவியா என பாலாஜி மஹத்தை பார்த்து கேட்கிறார்.என்ன நடந்தது என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

மேலும் படிக்க