• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கு ஓட்டு இல்லையா? – கடும் போராட்டத்திற்குப் பிறகு வாக்களித்த சிவகார்த்திகேயன்

April 18, 2019 தண்டோரா குழு

பாராளுமன்ற தேர்தலுக்கு ஓட்டு போன்ற சென்ற சிவகார்த்திகேயன், கடும் போராட்டத்திற்குப் பிறகு வாக்களித்தார்.

நாடாளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 40 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் நடைபெறுகிறது.

இதையடுத்து. நடிகர்கள், நடிகைகள் பலரும் காலையிலேயே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது.

பின்னர் சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து பெற்றுக்கொண்டு மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் பாகம் 303 வாக்காளர் பட்டியல் வரிசை எண் 703ல் சிவகார்த்திகேயன் பெயர் எழுதப்பட்டு பின்னர் வாக்களித்தார். நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இருந்ததால் இந்த சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க