• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு – சிம்பு

November 24, 2018 தண்டோரா குழு

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் சிம்பு படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் தனக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் குற்றம் சாட்டியதையடுத்து, அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்போவதாக தகவல்கள்வெளியானது. இதற்கிடையே, இந்த படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என்று விஷால் முயற்சிப்பதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தது.

எனினும், சிம்பு ரசிகர்கள் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்ய, சிம்பு தனது ரசிகர்களை அமைதிப்படுத்தினார். இதற்கிடையில், தற்போது, விரைவில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் பாடல் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் வருகின்றன. இந்த பாடல் தான் விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க