• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியல் வெளியீடு

June 14, 2017 தண்டோரா குழு

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக அளவில் அதிகம் சம்பளம் பெறும் டாப் 100 நடிகர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது .

இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஷாருக்கான் ரூ.245 கோடி சம்பளம் பெற்று ஃபோர்ப்ஸ் பட்டியலில் 65வது இடத்தை பிடித்துள்ளார். சல்மான் கான் ரூ.238 கோடியுடன் 71வது இடத்திலும், அக்ஷய் குமார் ரூ. 228 கோடியுடன் 80வது இடத்திலும் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்த 100 திரையுலக நட்சத்திரங்களின் பட்டியல், ஜூன் 1, 2016 முதல் ஜூன் 1, 2017 வரையிலான நடிகர்களின் வரிக்கு முந்தைய வருமானத்தை கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. நீல்சன், போல்லஸ்டார் மற்றும் ஐஎம்டிபி ஆகியவற்றின் எண்ணிக்கையையும், தொழில் நிபுணர்களின் நேர்காணல்களையும் அடிப்படையாகக் கொண்டு ஃபோர்ப்ஸின் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸின் 100 திரையுலக நட்சத்திரங்களின் பட்டியலில் 66% பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல், ஐரோப்பாவில் இருந்து 20% நட்சத்திரங்களும், கனடாவில் இருந்து 12% நட்சத்திரங்களும், 5% ஆசிய நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க