 April 8, 2019
April 8, 2019  
                                உங்களுக்காக உழைத்த ரசிகர்களை மறந்துவிட்டீர்களா? என  தனுஷ் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து அடுத்ததாக  வெற்றிமாறன் இயக்கத்தில்  அசுரன் படத்தில் நடித்து வருகிறது. நடிகர் தனுஷ் தனக்கு என்று  தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.  
இந்நிலையில் தனுஷ் ரசிகர்களை மறந்துவிட்டதாக கூறி கண்டன போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது. தனுஷ் ரசிகர்களின் இந்த போஸ்டர் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில்,  “இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? இவனுக்கெல்லாம் ரசிகர் மன்றமா? என ஆரம்பத்தில் பல அவமானங்களைத் தாண்டி நின்றவர்கள் நாங்கள். ரசிகர்களை நீக்குவதற்கு சிவாவும் ராஜாவும் யார்? பல தோல்விகளிலும் என்னை தாங்கி பிடித்த தூண்கள். என் ரசிகர்கள். என் ரசிகர்களை எக்காரணம் கொண்டும் நான் கைவிடமாட்டேன் என்று சொன்னாயே தலைவா. ஆனால் உங்களுக்காக உழைத்த ரசிகர்களை மறந்துவிட்டீர்களா?நாங்களா உங்களை தனுஷுக்காக கட்-அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்யச் சொன்னோம் என்று ஆவணத்தோடு பேசிய டச் அப் மேன் ராஜா மீது நடவடிக்கை எடு. தலைவன் தனுஷ் நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் இல்லாத படமா என சொல்ல வைத்துவிடாதீர்கள். நீங்கள் மறந்தால் போராட்டம் வெடிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.