January 20, 2018
தண்டோரா குழு
பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடிகர் சூர்யாவை கிண்டலாக விமர்சித்ததாகக் கூறி அவரது ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது மட்டுமின்றி அந்த சூர்யாவை கிண்டலடித்து பேசிய அந்த தொகுப்பாளரை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவைதெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.” என்று அவர் கூறியுள்ளார்.