• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்கை வரலாறு படத்தை இயக்கி நடிக்கும் மாதவன்!

January 22, 2019 தண்டோரா குழு

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படம் ‘ராக்கெட்ரி-தி நம்பி எபெக்ட்’ இத்திரைப்படத்தில் நடிக்கும் மாதவன் அவரது தோற்றத்தை வெளியிட்டுள்ளதோடு அந்த படத்தை தானே இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கி வந்தார். தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆனந்த் மகாதேவன் இப்படத்தில் இருந்து விலக, நடிகர் மாதவன் தனியாக இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக இப்படத்தை ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து இயக்கப்போவதாக மாதவன் தெரிவித்திருந்தார்.

1990களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நம்பி நாராயணன், தனது வேலையை இழந்து சிறைச் சென்றார். சமீபத்தில் இது தொடர்பான வழக்கில் இருந்து நிரபராதி என விடுவிக்கப்பட்டார். நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் படிக்க