வளர்ந்துவரும் இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மியூஸிக் லவுன்ஜ் என்ற பாடல் தளம் அமைந்துள்ளது. இதில் பாடல்களை பதிவு செய்துகொண்டு ஆன்லைனில் கேட்கலாம். மாருதி சுசூக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நெக்ஸா மியூஸிக் தளத்தில் இளம்பாடகர்கள் தங்கள் பாடல், வரிகள், பின்னணி இசை ஆகியவற்றை பதிவேற்றிக்கொள்ளலாம். இதற்கு இசை பிரியர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
இவர்களுள் தேர்வானவர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இசைக் கலைஞர் கிளிண்டன் செரேஜியோ ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் Qyuki Digital Media நிறுவனம் நெக்ஸாவுடன் சேர்ந்து இந்த போட்டியை நடத்த உள்ளது. இளம் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்த டியூனை நெக்ஸாவில் பதிவிடவேண்டும். அவற்றிலிருந்து 24 டியூன்கள் தேர்வு செய்யப்படும். அதன் இசையமைப்பாளர்களுக்கு ரகுமான் தலைமையில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுள் 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரகுமானுடன் மேடை இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
இதுகுறித்து ரகுமான் பேசுகையில்,
நெக்ஸா மியூஸிக் லாவுஞ்ச் மூலமாக திறமையான இளம் கலைஞர்கள் புகழ்பெற்ற இசை பேண்ட்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதனுடன் எனது நிறுவனம் இணைத்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது