தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பினை துவங்கியுள்ளார்.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தற்போது‘சீம ராஜா’ என்னும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ்பிக்ஷன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ரஜேஷ் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.‘சீம ராஜா’ முடிந்த பிறகு ரவிக்குமார்,எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
வடகோவை சிந்தாமணி சந்திப்பில் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு!
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் – மணிகண்டன்
கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் அதிநவீன கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தளம் துவக்கம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கோயம்புத்தூர் மெரிடியன் இணைந்து எலும்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ப்ளாசம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினர்
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை