• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சக இயக்குநர்கள் !

April 22, 2019 தண்டோரா குழு

ஜென்டில் மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இவர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக ‘ஷங்கர் 25’ என்ற நிகழ்ச்சியை ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தினார்கள்.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கருடன் நட்புடன் இருக்கும் இயக்குநர்கள் பலரும் இணைந்து தற்போது அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.இதற்காக இயக்குநர் மிஷ்கின் அவரது அலுவலகத்தில் ஒருங்கிணைத்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், லிங்குசாமி, பாண்டிராஜ், மோகன் ராஜா, கவுதம் மேனன், எழில், சசி, பா.ரஞ்சித், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஷங்கரை கவுரவித்துள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு கேக் ஒன்றும் வெட்டப்பட்டது.

இதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் தவிர மற்ற அனைவரும் எஸ் 25 என்று எழுதப்பட்டிருந்த நீல நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க