• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குநர் ஏ.எல் விஜய் சாய் பல்லவியுடன் இரண்டாவது திருமணமா?

March 27, 2019 தண்டோரா குழு

கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து மதராசபட்டிணம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது, ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன், தேவி 2, ஆகிய படங்களை முடித்து ஜெயலலிதாவின் பயோபிக் எடுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் ஏ.எல்.விஜய்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடிகை அமலாபாலுடன் இவருக்கு திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதற்கிடையில் பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் தமிழில் தியா, மாரி 2 உள்ளிட்ட படங்களில் நடத்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில், இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள விஜய் தரப்பு, இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும் கூறியுள்ளது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான கரு படத்தில் நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க