தன்னை தரக்குறைவாக நடத்தியதாக துணை நடிகை கிருஷ்ணதேவி இயக்குநர் அட்லீ மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
தேறி, மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் – அட்லி கூட்டணியில் உருவாகி வரும் படம் தளபதி 63. நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
தற்போது சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,இயக்குநர் அட்லி மற்றும் உதவி இயக்குநர்கள் மீது படப்பிடிப்பின்போது தன்னை தரக்குறைவாக நடத்தியதாக துணை நடிகை கிருஷ்ணதேவி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது