 June 14, 2017
June 14, 2017  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம்,வேதாளம் படத்தின் வெற்றியை  தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். 
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிங்கள் டிராக் 21ம் தேதி வெளியாகவுள்ளது என கூறப்பட்டது. ஆனால், அதனை படக்குழு மறுத்தது.  
இந்நிலையில், இன்று இரவு 12மணிக்கு விவேகம் படத்தின் 51 நொடிகள் பாடல் டீசரை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.