• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இசையமைப்பாளராக அறிமுகமாகும் க்ரிஷ்

July 11, 2018

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கதாநாயகன்’. இப்படத்திற்கு பின் அவருக்கு எந்த படமும் வெளியாகவில்லை.எனினும், விஷ்ணு விஷால் ராட்சன்,சிலுக்குவார்பட்டி சிங்கம்,ஜகஜால கில்லாடி என மூன்று படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

இதற்கிடையில்,நான்காவதாக ஒரு புதிய படத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.அவருடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகும் நான்காவது படத்தை,அவருடைய பெற்றோரின் திருமண நாளான இன்று தொடங்கியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ள படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்கவுள்ளார்.பிரபு,சரண்யா பொன்வண்ணன், முனிஷ்காந்த்,சிங்கம்புலி,பிரவீன்,நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில்,இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பின்னணிப் பாடகரும் நடிகருமான க்ரிஷ்.இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இடம்பெற்ற ‘மஞ்சள் வெயில் மாலையிலே…’ பாடலைப் பாடி பின்னணிப் பாடகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க