May 29, 2018
தண்டோரா குழு
கடந்த வருட இறுதியில் அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்த படம் அருவி. இப்படம் ரசிர்கள் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
ரஜினி உள்ளிட்ட பல்வேறு திரைபிரபலங்கள் இப்படத்தின் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், அருவி திரைபடத்தின் இயக்குனர் அருண்பிரபுவின் புதிய படத்திற்கான பூஜை இன்று குமிழி லோயர் கேம்ப் மலைப்பகுதியில் நடந்தது. 24ஏம் ஸ்டுடியோ மூலம் ஆர்.டி ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.
இது குறித்து ஆர்.டி.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில்,
இந்த படம் நகைச்சுவையாகவும் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதத்துடன் இந்த படத்தை துவங்கவுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
விரைவில் இப்படத்தில் நடிக்கும் நாயகர்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.