 June 16, 2017
June 16, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த வெளிப்படையான முடிவை விரைவில் அறிவிக்க நாள் குறித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, மும்பை சென்றார். கபாலி படத்திற்குப் பின் தொடர்ந்து இரண்டாவதாக பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பிற்காக அவர் மும்பைக்குப் பறந்தார்.
சில தினங்களுக்கு முன்பாக தமிழகம் வந்த அவர், மீண்டும் ரசிகர்களைச் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்த முறை ரஜினியின் ரசிகர்கள் சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
முதல் சந்திப்பின்போது, ‘ஆண்டவன் ஆணையிட்டால்’ என்று நிபந்தனை போட்ட ரஜினி இரண்டாவது சந்திப்பில் ஆண்டவனின் ஆணை கிடைத்துவிட்டது என்று சொல்லி அரசியிலில் குதிப்பார் என்று அவரது ஆதரவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த சந்திப்பிற்கான தேதி ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.