• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

May 12, 2020 தண்டோரா குழு

தர்பார் படத்தின் வெற்றியை தொடர்ந்து
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

‘அண்ணாத்த’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கி, வரும் தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் ‘அண்ணாத்த’ படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க