• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு இது தான் !

October 31, 2019 தண்டோரா குழு

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’,‘பிகில்’என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து,தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் அட்லீ.இந்நிலையில், அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளது.அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,தமிழ்,இந்தி மொழிகளில் தயாராக உள்ள இப்படத்திற்கு ‘சங்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க